உக்ரைன் மீதான தாக்குதல் - ரஷ்யாவுக்கு பிரான்ஸ் கண்டனம்..!

உக்ரைன் மீதான தாக்குதல் - ரஷ்யாவுக்கு பிரான்ஸ் கண்டனம்..!
உக்ரைன் மீது சட்டவிரோதமாக கொடூரத் தாக்குதல் நடத்தும் ரஷ்யாவுக்கு பிரான்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பெங்களூர் ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற பிரான்ஸ் நாட்டின் நிதியமைச்சர் புரூனோ லீ மாய்ரி ரஷ்யா மீதான பிரான்ஸின் கண்டனத்தை மீண்டும் உறுதி செய்தார்.
ஜி 20 தலைமைப் பொறுப்பை வகிக்கும் இந்தியாவுக்கு வாழ்த்துக் கூறிய அவர் இந்தியாவின் மீது முழு நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிட்டார்.
உக்ரைன் யுத்தம் ஒரு பிரதேசத்தை மட்டும் அல்ல உலகளவில் பொருளாதார ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் யுத்தமாகும் என்றும் புரூனோ கூறினார்.
Comments