இளைஞருக்கு திடீர் மாரடைப்பு.. "சிபிஆர்" சிகிச்சை அளித்த உயிரை காப்பாற்றிய போக்குவரத்து காவலர்..!

தெலுங்கானாவில் மாரடைப்பு ஏற்பட்டு மூர்ச்சையான இளைஞர் ஒருவருக்கு சிபிஆர் சிகிச்சை அளித்து போக்குவரத்து காவலர் ஒருவர் காப்பாற்றினார்.
ரங்கார ரெட்டி மாவட்டம் ராஜேந்திரா நகரில் அரசுப் பேருந்து ஒன்றில் அந்த இளைஞர் பயணித்துக் கொண்டிருந்தார்.
ஆரா நகர் என்ற இடத்தின் அருகே செல்லும்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்ட நிலையில், அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் விரைந்து வந்து இளைஞரை கீழே இறக்கி சிபிஆர் சிகிச்சை அளித்தார்.
சிறிது நேரத்தில் இளைஞருக்கு சுவாசம் திரும்பியதும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Comments