அன்புஜோதி ஆசிரம நிர்வாகிகளை காவலில் விசாரிக்கக் கோரி சிபிசிஐடி மனு..!

அன்புஜோதி ஆசிரம நிர்வாகிகளை காவலில் விசாரிக்கக் கோரி சிபிசிஐடி மனு..!
விழுப்புரம் - குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்ததால் ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், மேலாளர் பிஜூ மோகன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத் தாக்கல் செய்தனர். இம்மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
Comments