போலி நகைகளை 22 இலட்சம் ரூபாய்க்கு வங்கியில் அடகு வைத்து மோசடி செய்த நபர் கைது..!

சென்னை பாரிமுனையில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை 22 இலட்சம் ரூபாய்க்கு வங்கியில் அடகு வைத்து மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
என்.எஸ்.சி போஸ் சாலை பகுதியை சேர்ந்த ஹர்சல் சிவாஜி என்ற நபர் அதே பகுதியில் உள்ள ஐடிபிஐ வங்கியில் நகைகளை அடகு வைத்து பணம் பெற்ற நிலையில் 2 ஆண்டுகளாக நகைக்கு வட்டி கட்டாமலும், நகையை மீட்காமலும் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதம் நகைகளை ஏலம் விட முடிவு செய்த வங்கி அதிகாரிகள் நகைகளை ஆய்வு செய்த போது, அவை தங்க முலாம் பூசப்பட்டவை என தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்பிளனேடு போலீசார் நடத்திய விசாரணையில் அந்நபர் தனியார் கோல்டு லோன் நிறுவனத்திலும் போலி நகைகளை அடகு வைத்து 18 லட்சம் பெற்று ஏமாற்றியது தெரிய வந்தது.
இந்நிலையில் நேற்று ஹர்சல் சிவாஜியை கைது செய்த போலீசார், அவருக்கு உடந்தையாக இருந்ததாக, வங்கியின் நகை மதிப்பீட்டாளர் ஹரிபிரசாத்தை தேடி வருகின்றனர்.
Comments