இருசக்கர வாகனத்திற்கு வழிவிடவில்லை எனக்கூறி அரசுப்பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்..!
அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே இருசக்கர வாகனத்திற்கு வழிவிடவில்லை எனக்கூறி, நடுவழியில் அரசுப்பேருந்தை நிறுத்தி, ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய 2 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
70A தடம் எண் கொண்ட அரசுப்பேருந்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை சிக்னல் அருகே சென்ற போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் வழிவிடச்சொல்லி, ஹாரன் அடித்துக் கொண்டே சென்றுள்ளனர்.
அவர்கள் பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது, இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து லேசாக உரசியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் பார்த்திபனை எட்டி உதைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
ஓட்டுநரை தாக்கிய 2 இளைஞர்களையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்ததில், அவர்களின் பெயர் ஸ்ரீதர், விக்னேஷ் என்பதும் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் ஊழியர்களாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
Comments