மன உளைச்சலால் பல்துலக்கும் பிரஷ், பேண்ட் ஜிப் உள்ளிட்ட பொருட்களை விழுங்கிய நபர் வயிற்று வலியால் அவதி..!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவிலில் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட இளைஞரின் வயிற்றில் இருந்து பல்துலக்கும் பிரஷ், பேண்ட் ஜிப், பிளாஸ்டிக் குச்சி உள்ளிட்ட பொருட்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தனர்.
சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடுமையான குடிப்பழக்கத்தின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மறுவாழ்வு மையத்தில் 4 மாதம் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
பின் வயிற்று வலி காரணமாக அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சி.டி.ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அவரின் வயிற்றில் பல பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
மன உளைச்சல் காரணமாக அந்த இளைஞர் பிளாஸ்டிக் குச்சி உள்ளிட்ட பொருட்களை விழுங்கி இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Comments