பெண்கள் மீது வெறி ஜன்னல் சைக்கோ செய்த அட்டூழியம்.. 47 வயது பெண் உயிர் ஊசல்..!

0 2742

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த உறவுக்கார பெண்ணை இரும்பு கம்பியால் தலையில் தாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சைக்கோ என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த மூவாற்று முகம் பகுதியை சேர்ந்தவர் 28 வயதான டிப்ளமோ என்ஜினியர் எட்வின். பக்ரைன் கத்தார், மஸ்கட் போன்ற அரபு நாடுகளில் தங்கி சிங்கிளாக பணிபுரிந்த எட்வினுக்கு பெண்கள் மீது அதீத ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. வெளி நாட்டில் இருந்து ஊருக்கு திரும்பியதும் தனியாக வீட்டில் படுத்து உறங்கும் பெண்களை பார்த்து ரசிக்கும் சைக்கோவாக மாறிய எட்வினின் குரூர பார்வை, இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த மாமி உறவு முறை கொண்ட 47 வயது பெண்ணை சுற்றியுள்ளது.

அந்தப்பெண் தனது இரு மகள்களுக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு தனது கணவருடன் அந்த வீட்டில் வசித்து வந்தார்.

அண்மையில் அந்தப்பெண் வீட்டில் தூங்குவதை ஜன்னல் வழியாக பார்த்து மெய் மறந்து ரசித்துக் கொண்டிருந்த எட்வின் அந்தப்பெண்ணிடம் கையும் களவுமாக சிக்கினான். ஜன்னலில் பல்லி போல ஒட்டியிருந்த எட்வினை பார்த்து சத்தமிட்டதோடு, எட்வினின் தாய் ரோஸ்லியிடம் அவனது சைக்கோ சேட்டை குறித்து புகார் செய்துள்ளார்.

ஊரில் உள்ள மற்றவர்களிடமும் எட்வினின் வினோத கைவரிசை குறித்து தெரிவித்ததால் எட்வின் வெளியில் தலை காட்ட முடியாத அளவிற்கு அவமானப்பட்டதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தன்று புதுமனை புகுவிழாவிற்கு சென்று திரும்பிய அந்தப்பெண் வீட்டில் மரக்கட்டிலில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதை கவனித்த எட்வின், யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் புகுந்து, அந்த பெண்ணை இரும்பு கம்பியால் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளான்.

அந்தப்பெண் சத்தமிட்டதால் தலைமுடியை பிடித்து கட்டில் சட்டத்தில் வைத்து மோதி சுய நினைவை இழக்க செய்துள்ளான். மயக்கமடைந்த பெண் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் , சைக்கோ எட்வின் அந்தப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து தப்பி உள்ளான்.

எட்வின் வீட்டில் இருந்து வெளியில் ஓடுவதை கண்ட அந்தப்பெண்ணின் கணவர் பதறிபோய் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பலத்த காயத்துடன் கிடந்த தனது மனைவியை மீட்டு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

அவர் அளித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டில் இருந்து தப்பி ஓடிய எட்வினை, கழுவந்தட்டை பகுதியில் வைத்து கைது செய்தனர்

பெண்களை ரசித்து பார்க்கும் பழக்கத்தை வீட்டில் போட்டு கொடுத்த ஆத்திரத்தில் அந்தப்பெண்ணை தாக்கியதாகவும், மேலும் அவர் மீது ஏற்பட்ட அதீத ஆசையால் அத்துமீறியதாகவும் எட்வின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவனை பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

திருவனந்தபுரத்தில் இருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட அந்தப்பெண் மயக்க நிலையில் இருந்தாலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments