நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

0 1254

கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கடுமையான தாக்குதல் நடத்தி, 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

நாகப்பட்டினம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது ஃபைபர் படகில் அதே பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள், மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, 4 படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள் சுற்றி வளைத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில், தமிழக மீனவர் முருகனின் இடது கையின் 3 விரல்கள் துண்டாகின. தொடர்ந்து, படகிலிருந்த மீன்கள், ஜி.பி.எஸ் கருவி, வலைகள், செல்போன்கள் உள்ளிட்டவற்றையும் கொள்ளையடித்து சென்றனர்.

படுகாயத்துடன் கரை திரும்பிய மீனவர்கள், நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments