ஏர் இந்தியா உடன்பாடு தொடர்பாக பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தொலைபேசியில் பேச்சு..!

டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனம் புதிதாக 510 விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல் ஒப்பந்தம் நேற்று ஏர் இந்தியா மற்றும் அமெரிக்காவின் போயிங் நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்டது.
போயிங்கிடமிருந்து ஏர் இந்தியா290 விமானங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.இதர விமானங்களை பிரான்சின் ஏர்பஸ் நிறுவனத்திடம் வாங்குகிறது ஏர் இந்தியா.
போயிங்குடன் ஏர் இந்தியாவுக்கு உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அதிபர் ஜோபைடன் இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பை வரவேற்பதாகக் கூறினார்.
இரு தலைவர்களும் ஜி 20 தலைமைப் பொறுப்பை இந்தியா வெற்றிகரமாக கொண்டு செல்ல பரஸ்பரத் தொடர்பில் இருக்கவும் ஒத்துழைக்கவும் உறுதி ஏற்றுக் கொண்டனர்.
Comments