சேலத்தில் சட்ட விரோதமாக இயங்கிய செல்போன் இணைப்பகம் கண்டுபிடிப்பு - மர்ம நபருக்கு வலை வீச்சு..!

சேலத்தில் சட்ட விரோதமாக இயங்கிய செல்போன் இணைப்பகம் கண்டுபிடிப்பு - மர்ம நபருக்கு வலை வீச்சு..!
சேலத்தில் வெளிநாட்டு செல்போன் அழைப்புகளை உள்ளூர் அழைப்பாக மாற்றி சட்ட விரோதமாக இயங்கிவந்த செல்போன் இணைப்பகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள செல்வநகரில் பெங்களூரை சேர்ந்த ஒருவர்,கடந்த நான்கு மாதங்களாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.
இங்கு சிம்பாக்ஸ் என்கின்ற சட்டவிரோதமாக செல்போன் இணைப்பகம் மூலம் வெளிநாட்டு செல்போன் அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
பதினாறுக்கும் மேற்பட்ட சிம்பாக்ஸ்கள்,300-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Comments