ஹீமோபிலியா என்ற அரிய வகை ரத்த போக்கு நோயால் அவதிப்படும் ஹர்சினியை, நேரில் அழைத்து நம்பிக்கை அளித்த முதலமைச்சர்

0 1520

சென்னையில் ஹீமோபிலியா என்ற அரிய வகை ரத்த போக்கு நோயால் பிறந்தது முதல் அவதிப்படும் 9 வயது சிறுமி ஹர்சினிக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

சிறுமி குறித்து அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுமியை முகாம் அலுவலகத்திற்கு நேற்று மாலை நேரில் அழைத்து நோய் குறித்து விசாரித்தார். உடம்பில் காயம் ஏற்பட்டால் அந்த இடத்தில் ரத்தம் கசிந்துகொண்டே இருக்கும் எனக் கூறப்பட்டது.

சிறுமிக்கு நம்பிக்கை அளித்த முதல்வர், அவரது குடும்பத்திற்கு வீடு வழங்கவும் உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று காலை சிறுமியின் வீட்டிற்கு சென்ற அமைச்சர் சேகர்பாபு, அப்பகுதியில் சாலையோரம் வசித்து வரும் 10-ற்கும் மேற்பட்ட குடும்பத்திற்கு வீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று இருந்து அழைப்பு வந்ததையடுத்து சிறுமியை அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் மருத்துவமனை சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments