குழந்தைகளுடன் சென்ற பெண்ணை நடுவழியில் இறங்குமாறு கூறிய ஓட்டுநர், நடத்துனர் பணியிடை நீக்கம்..!

0 3379

ஆரணி அருகே குழந்தைகளுடன் அரசு பேருந்தில் சென்ற பெண்ணை நடுவழியில் இறங்குமாறு கூறிய ஓட்டுநர், நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கடந்த 6ம் தேதி, சிகிச்சைக்காக தனது 2 குழந்தைகளுடன் ஆரணி வந்த ஜெயபிரியா என்பவர், வீடு திரும்ப ஆரணியில் இருந்து வாழப்பந்தல் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார்.

பேருந்து மேல்புதுப்பாக்கம் சென்றதும் பயணிகள் அனைவரும் இறங்கியுள்ளனர்.

இதனால் பேருந்திலிருந்த ஜெயபிரியாவையும் அங்கேயே இறங்குமாறு ஓட்டுநரும் நடத்துனரும் கூறியதாக தெரிகிறது. 4 கிலோ மீட்டர் தூரம் குழந்தைகளுடன் தனியாக நடந்து செல்ல முடியாது எனக்கூறிய ஜெயபிரியா பேருந்தில் இருந்து இறங்க மறுத்ததால், அவரை மீண்டும் ஆரணியில் கொண்டு வந்து இறக்கிவிட்டுள்ளனர்.

இதையறிந்த, வாழப்பந்தல் கிராம மக்கள் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஓட்டுநரையும் நடத்துனரையும் பணியிடை நீக்கம் செய்து, திருவண்ணாமலை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments