உடல் நலக்குறைவால் உயிரிழந்த மனைவியின் உடலை ஒடிசாவில் உள்ள சொந்த ஊருக்கு தோளில் சுமந்து சென்ற கணவன்..!

0 3591

விசாகப்பட்டினத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த மனைவியின் உடலை சுமார் 205 கிலோ மீட்டர் தூரத்தில் ஒடிசாவில் உள்ள சொந்த ஊருக்கு தோளில் சுமந்து சென்று கொண்டிருந்த கணவனுக்கு போலீசார் உதவி செய்துள்ளனர்.

கொரபுட் மாவட்டம், சரோட கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சாமுலு, மனைவி இடுகுருவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், விசாகப்பட்டனத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

சிகிச்சைக்கு இடுகுருவின் உடல் ஒத்துழைக்காத நிலையில் அவரை அழைத்துக் கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் கூறிய நிலையில், பேருந்தில் மனைவியை அழைத்து செல்ல இயலாது என்பதால், ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார்.

விஜயநகரம் அருகே இடுகுரு திடீரென உயிரிழந்ததையடுத்து ஆட்டோ ஓட்டுநர் நடுவழியில் இறக்கிவிட்டதால் மொழி தெரியாத ஊரில், வாடகை ஆம்புலன்சிற்கு பணமும் இல்லாமல் தவித்த சாமுலு மனைவியின் உடலை தோளில் சுமந்து நடக்க செல்லத் தொடங்கியுள்ளார்.

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு வந்த போலீசார் கட்டணம் ஏதுமின்றி ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments