நகை அடகுக் கடை நடத்தி ரூ.7.83 லட்சம் மோசடி.. உரிமையாளரை கைது செய்து போலீஸ் விசாரணை!

0 1498

கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் நகை அடகுக் கடை நடத்தி 7 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் அளவிற்கு மோசடி செய்த அடகு கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

குப்பு கிருஷ்ணா என்ற பெயரில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய நுழைவு வாயில் அருகே நகை அடகு நடத்தி வரும் கார்த்திகேயன், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்ததுடன், அதனை அபரித்துக் கொண்டு அதற்கு ஈடாக போலி நகைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கு அடகுவைத்த நகைக்கு வட்டியுடன் சேர்த்து பணம் செலுத்திய பிறகும், நகைகளை தராமல் இழுத்தடித்து வந்ததாக பாதிக்கப்படடவர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments