காவல் அதிகாரி மீது 71 பாலியல் குற்றச்சாட்டுகள்.. 36 ஆயுள் தண்டனைகள் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!

71 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த லண்டன் மாநகர முன்னாள் காவல் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராணுவத்தில் பணியாற்றி பின் காவல்துறையில் சேர்ந்த டேவிட் காரிக்-கிற்கு, வி.ஐ.பி-களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் பல பெண்களிடம் நயமாகப்பேசி தன்வசப்படுத்திய காரிக், அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
பலர் புகாரளிக்க அஞ்சிய நிலையில், ஒரு பெண் தைரியமாக முன்வந்து புகாரளித்ததால் கைது செய்யப்பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்ட காரிக்கிற்கு, 12 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவழக்கில் 36 ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
Comments