ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல்; வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு..!

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் திங்கள்கிழமை வரை 60 பேர் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், கடைசி நாளான இன்று 103 பேர் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 27ஆம் தேதியன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், கடந்த 31ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. வேட்பு மனு படிவம் பெற்ற 163 பேரில், இதுவரை 60 பேர் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், எஞ்சியிருக்கும் 103 பேர் இன்று மனுத்தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் நாம் தமிழர் கட்சி, அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று மதியம் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments