கேரளாவில் கடந்த 6 ஆண்டுகளில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் 300 சதவீதம் அதிகரிப்பு..!

0 1295

கேரளாவில் கடந்த 6 ஆண்டுகளில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை 300 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2016ம் ஆண்டில் 5 ஆயிரத்து 924 வழக்குகள் பதிவான நிலையில், 2022ம் ஆண்டில் 26 ஆயிரத்து 629 வழக்குகள் பதிவானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில், தற்போது இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள காவல்துறை ஏடிஜிபி அனந்தகிருஷ்ணன், கடைகளில் கிடைக்கும் சாதாரண நோய்களுக்கான மருந்துகள் மற்றும் ரசாயனங்களை ஒன்றோடொன்று கலந்து, அதனை போதைக்காக பயன்படுத்தும் பழக்கமும் இளைஞர்களிடம் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments