மூச்சுத்திணறலால் போராடிய 3 மாத குழந்தை.. வேண்டுமென்றே ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் இடையூறு செய்த இன்னோவோ கார்..!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, சைரன் ஒலியோடு அவசரமாகச் செல்லும் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் வேகமாகச் செல்லும் இன்னோவா காரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
புங்கம்பள்ளியில் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட 3 மாத குழந்தையை ஏற்றிக்கொண்டு, கோவையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் அவரசமாக சென்றுக் கொண்டிருந்தது.
நல்லூர் பகுதி தேசிய நெடுஞ்சாலையை ஆம்புலன்ஸ் அடைந்தபோது, முன்னால் சென்ற கார் வழி விடாமல் ஆம்புலன்ஸோடு போட்டி போட்டுக்கொண்டு முன்னாலேயே வேகமாகச் சென்றுக் கொண்டிருந்தது. இதனால், ஆம்புலன்ஸ் ஓட்டுநரால் விரைவாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டதை, ஆம்புலன்ஸ் உதவியாளர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டார்.
Comments