பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற குண்டம் திருவிழா..!

பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
தை அமாவாசை நாளான கடந்த ஜனவரி 21ம் தேதி இக்கோவிலில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று, 18 நாட்களாக விரதமிருந்த ஏராளமான பக்தர்கள், தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மாசாணியம்மனை வழிபட்டுச் சென்றனர்.
Comments