வெள்ளைக்கார ஜேப்படி கொள்ளைக்காரன் ரூபாய் நோட்டுகளை திருட முயற்சி..! வியாபாரிகளே உஷார்..!

0 3277

நாமக்கல் மொபைல் கடைக்கு  வந்த இரு வெளிநாட்டுக்காரர்கள், இந்திய ரூபாய் நோட்டை காண்பியுங்கள் என்று  கூறி பணத்தை தொட்டு பார்ப்பது போல அபேஸ் செய்ய முயன்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

நாமக்கல் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் மொபைல் சர்வீஸ் கடைக்கு இரு வெளி நாட்டுக்காரர்கள் வந்துள்ளனர். வெளிநாட்டு நோட்டுக்களை உங்கள் கடையில் மாற்ற முடியுமா என கேட்டுள்ளனர்.

அதற்கு அந்த ஊழியர் வங்கியில் தான் மாற்ற முடியும் என கூறியுள்ளார். இதன் பின் உங்கள் இந்திய ரூபாய் நோட்டுக்கள் எப்படி இருக்கும் ? என ஒரு வெளி நாட்டவர் கேட்க அந்த ஊழியரும் பெட்டியில் இருந்த 200, 500, 2000 ரூபாய் நோட்டுக்களை எடுத்து இது தான் இந்திய நோட்டுக்கள் என காண்பித்துள்ளார்.

வேகமாக அந்த நோட்டுக்களை வாங்கிய அந்த நபர், பாதி நோட்டுக்களை எடுத்து அவரது கையில் இருந்த பர்ஷுக்கு அடியில் மறைத்து தைத்ததை கண்ட மற்றொரு ஊழியர், திருட முயன்ற வெளி நாட்டவரை கையும் களவுமாக பிடித்து போலீஸ் போலீஸ் என கூச்சலிட்டுள்ளார்.

கூச்சல் சத்தத்தை கேட்ட இரு வெளி நாட்டு திருடர்களும் அங்கிருந்து தப்பி ஓடி சாலையோரம் தயாராக நின்று கொண்டிருந்த காரில் ஏறி தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

இதே போல் நாமக்கல் நகர் பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்குள் புகுந்த இதே இரு வெளி நாட்டவர்களும், கடைக்குள் வலம் வந்துள்ளனர். காய் கறி மார்க்கெட்டில் உள்ள ஊழியரிடம் அதே போல் வெளிநாட்டு நோட்டுக்களை வைத்து இந்திய நோட்டுக்களை காட்டச் சொல்லி உள்ளனர்

இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் இது குறித்து நாமக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர். வெளி நாட்டுக்காரர்கள் யாராவது வந்து உங்கள் நாட்டு ரூபாய் நோட்டுக்களை காட்டுங்கள் ? என்று கூறினால் கடையில் உள்ள வியாபரிகள் உஷாராக இருக்கும்படி எச்சரித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments