புதுச்சேரியில் பள்ளி சீருடை அணிந்து சட்டசபைக்கு சைக்கிளில் வந்த திமுக உறுப்பினர்கள்..!

0 1530

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்து எட்டு மாதங்கள்ஆகியும் அரசு இதுவரை இலவச சீருடை மற்றும் புத்தகப்பை வழங்காததை கண்டித்து சட்டமன்ற எதிர்க்கட்சி திமுக உறுப்பினர்கள் பள்ளி சீருடை போன்று உடை அணிந்து சைக்கிளில் சட்டப்பேரவைக்கு வந்தனர்.

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி,அமைச்சர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ராணி எலிசபெத்திற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்த நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்படாததை கண்டித்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments