ஸ்பெயின் தீவுப்பகுதிகளில் சிக்கித் தவித்த 171 அகதிகள் பத்திரமாக மீட்பு..!

0 1166

ஸ்பெயினின் தீவுப்பகுதிகளில் 3 படகுகளில் சிக்கித் தவித்த 171 அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கேனரி தீவிற்கு ஒரு படகில் வந்த 55 பேரையும், ஃபூர்டெவென்ச்சுரா (Fuerteventura) தீவில் 2 படகுகளில் வந்த 116 பேரையும் ஸ்பெயின் கடலோர பாதுகாப்பு படையினர் மீட்டனர்.

கடும் குளிரில் சிக்கியவர்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தினர் மருத்துவ உதவி அளித்து தற்காலிக முகாம்களில் தங்க வைத்தனர்.

வடஅமெரிக்க நாடுகளிலிருந்து ஆபத்தான பயணம் மேற்கொண்டு அகதிகள் வருவதாகவும், ஜனவரி மாதத்தில் மட்டும் கனேரி தீவிற்கு 371 அகதிகள் வந்துள்ளதாகவும், 2022ம் ஆண்டில் 15 ஆயிரத்து 682 பேர் வந்துள்ளதாகவும் ஸ்பெயின் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments