ஒழுங்கா போய் வேலையை பாருங்க.. ‘ஒரே சூப்பர் ஸ்டார்’ கோஷமிட்ட ரசிகரை எச்சரித்த ரஜினிகாந்த்..!

0 4142

சென்னை விமான நிலையத்தில் ரஜினியை வாழ்த்தி ஒரே சூப்பர் ஸ்டார் என்று கோஷமிட்ட ரசிகரிடம் ஒழுங்காக சென்று வேலையை பாரு என்று ரஜினிகாந்த் அக்கறையுடன் எச்சரித்துச்சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது...

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் யார் என்று யூடியூப்பர்கள் பட்டிமன்றம் நடத்தி வரும் நிலையில் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேபாளத்தில் நடைபெறும் நான்காம் கட்ட ஜெயிலர் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு விமான மூலம் டெல்லி சென்று அங்கிருந்து நேபாளம் செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த் . இதற்காக சென்னை விமான நிலையம் வந்த ரஜினியை கண்டதும் குஷியான சில ரசிகர்கள் தலைவா வாழ்க... எனவும் ஒரே சூப்பார் ஸ்டார் எனவும் கோஷமிட்டனர்.

ஒரே சூப்பார் ஸ்டார் என்று கோஷமிட்ட இளைஞரை அழைத்த ரஜினி அவர் அருகில் நின்று ‘ஒழுங்கா போய் வேலையை பாருங்க ’ என்று அன்பாக எச்சரித்துவிட்டுச்சென்றார்.

தொடர்ந்து அனைவரையும் இரு கரம் கூப்பி வணங்கிய வாரே ரஜினிகாந்த் விமான நிலையத்துக்குள் சென்றார்...

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments