கோவையிலிருந்து பெங்களூரு சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து.. 11 பேர் காயம்!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தனியார் ஆம்னி பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 3 பெண்கள் உட்பட 11 பேர் காயமடைந்தனர்.
கோவையிலிருந்து பெங்களூருவுக்கு நேற்று இரவு புறப்பட்ட ஆம்னி பேருந்து, புதுச்சாம்பள்ளி என்ற இடத்தில் வந்தபோது பேருந்தின் பின்புறத்தில் புகை கிளம்பியுள்ளது.
இதனையறிந்த ஓட்டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்தினார். இதையடுத்த சில விநாடிகளில் பேருந்தில் தீ பிடிக்கவே, பேருந்தில் இருந்தோர் முண்டியடித்து கொண்டும், ஜன்னல் வழியாகவும் வெளியேறினர்.
தகவலறிந்து வந்த மேட்டூர் தீயணைப்பு படையினர் சுமார் 30 நிமிடங்கள் போராடி நெருப்பை அணைத்தனர். தீ விபத்தையடுத்து அனைவரும் கீழிறங்கியதால் டிரைவர் உள்ளிட்ட 44 பேரும் தப்பினர். தீ விபத்துக்கு காரணம் தெரியாத நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments