ஆஸ்திரேலியாவில் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் சீசியம் 137 மாயம்.. அதிகாரிகள் அச்சம்

ஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமான முறையில் உயிரிழப்பை ஏற்படுத்தும் கதிரியக்கப் பொருள் காணாமல் போனதால் அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
சீசியம் 137 எனப்படும் இந்த கதிரியக்க பொருள், கடந்த 10ஆம் தேதிக்கும் 16ஆம் தேதிக்கும் இடையே நியூமன் நகரத்திற்கும் பெர்த் நகரத்திற்கும் இடையே காணாமல் போனது.
சுரங்கத்தில் இருந்து லாரியில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்ட போது இந்த சிறிய கதிரியக்கக் குடுவை மாயமானதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து சுமார் ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேடுதல் வேட்டையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சீசியத்தைக் கொண்டு அணு ஆயுதம் தயாரிக்க முடியாது என்ற போதிலும், கதிரியக்கம் வெளியானால் தீக்காயம் போன்ற கொடூரமான காயங்கள், புற்று நோய் போன்றவை உடனடியாக ஏற்படும் என ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments