மலைப்பாதையில் சென்ற சுற்றுலா பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து.. 25 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு..!

தென் அமெரிக்க நாடான பெருவில் சுற்றுலா சென்ற பேருந்து மலைப்பாதையில் விழுந்து நொறுங்கியதில் 25 பேர் உயிரிழந்தனர்.
வடமேற்கு பெருவில் உள்ள பியூரா என்ற இடத்தில் இருந்து 60 பயணிகளுடன் சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டினை இழந்த பேருந்து மலைப் பாதையில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments