மண்ணை வாரி அடித்து சிறுவர்கள் சேட்டை.. கோபமடைந்த சிறுவர்களை தாக்கிய பாதிரியார்..

தூத்துக்குடி பெரியதாழை மீனவ கிராமத்தில் பள்ளி கலைநிகழ்ச்சியின் போது, மண்ணை வாரி அடித்து சேட்டை செய்த சிறுவர்களை, பாதிரியார் ஒருவர் தாக்கி அமர வைத்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
தூத்துக்குடி பெரியதாழை மீனவ கிராமத்தில் பள்ளி கலைநிகழ்ச்சியின் போது, மண்ணை வாரி அடித்து சேட்டை செய்த சிறுவர்களை, பாதிரியார் ஒருவர் தாக்கி அமர வைத்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
புனித அருளப்பர் முடியப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு புனித சவேரியார் ஆரம்பப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
மேடைக்கு கீழே அமர்ந்து கலைநிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் சிலர், ஒருவர் மீது ஒருவர் மண்ணை வாரி அடித்து விளையாடினர்.
இதனைக் கண்டு கோபமடைந்த பாதிரியார் சுசீலன், சிறுவர்களை தாக்கி, அமைதியாக அமரும் படி கூறியதை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
Comments