பழைய இரும்புக்கடையில் விற்கப்பட்ட அரசு சைக்கிள்கள்.. மாணவர்களிடம் ரூ.2,000க்கு வாங்கி ரூ.3,000க்கு விற்பனை..!

0 1700
பழைய இரும்புக்கடையில் விற்கப்பட்ட அரசு சைக்கிள்கள்.. மாணவர்களிடம் ரூ.2,000க்கு வாங்கி ரூ.3,000க்கு விற்பனை..!

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா சைக்கிள்கள், விருத்தாச்சலம் எம்.ஆர்.கே சாலையிலுள்ள பழைய இரும்பு கடையில் மூவாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

அவற்றை வாங்க பொதுமக்கள் பேரம் பேசிவந்த நிலையில், செய்தியாளர்கள் படம் பிடிப்பதை கவனித்த கடை ஊழியர்கள், சைக்கிள்களை அருகிலுள்ள குடோனில் பதுக்கி வைத்தனர். பள்ளி மாணவர்களிடம் ஒரு சைக்கிளை 2,000 ரூபாய்க்கு வாங்கி, அதனை 3000 ரூபாய்க்கு விற்பதாக கூறப்படுகிறது.

கிராமப்புறங்களில், நீண்ட தூர பயணத்தால் பள்ளிகளில் ஏற்படும் இடைநிற்றலைத் தடுக்க தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் விலையில்லா சைக்கிள்கள் விற்கப்படுவது தொடர்பாக மாவட்ட கல்வி நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments