ஈரானில் உள்ள அஜர்பைஜான் தூதரகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு

0 1195

ஈரானில் உள்ள அஜர்பைஜான் தூதரகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்தார். இன்று காலை தூதரகத்தில் உள்ள சோதனைச் சாவடியை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த அந்த நபர், துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். தாக்குதலை தடுக்க முயன்ற பாதுகாவலர்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.

உடனடியாக அந்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில், தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

தூப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர், 2 குழந்தைகளுடன் தூதரகத்திற்குள் வந்ததாகவும், தனிப்பட்ட பிரச்சனைகளால் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கலாம் என்றும் ஈரான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments