உக்ரைன் வீரர்களின் உடல்களைத் தேடி கண்டுபிடிக்கும் தன்னார்வலர்கள்

0 1861

போர்களத்தில் வீரமரணம் எய்தும் உக்ரைன் ராணுவத்தினரின் உடல்களைத் தேடிக் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

தாய்நாட்டிற்காக உயிர்தியாகம் செய்வோரின் உடல்கள் காடு, கழனிகளில் கேட்பாரின்றி கிடப்பதால், அவற்றை மீட்டு பெற்றோரிடம்கொண்டு சேர்ப்பதன் மூலம் அந்த உடல்கள் முறைப்படி நல்லடக்கம் செய்யப்படுவதாக தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிரி படைகளின் தாக்குதல், கண்ணிவெடிகள் போன்ற பல்வேறு அச்சுறுத்தல்களைத் தாண்டி, உயிரை பணயம் வைத்து இறந்துபோன வீரர்களின் சடலங்களை இவர்கள் மீட்டுவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments