மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசிய மர்ம நபர்கள்..!

0 1844

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நிர்வாகியின் வீட்டில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆடரவிளையைச் சேர்ந்த ஐயப்பன் வழக்கறிஞராக உள்ளார். சனிக்கிழமை இரவு பிள்ளையார்விளை பகுதியில் கோவில் திருவிழா தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சாலைமறியலில் ஈடுபட்ட ஐயப்பன் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வீசப்பட்டதில் இருசக்கர வாகனம் சேதமடைந்த நிலையில், கோயில் திருவிழா பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments