புது வருட பிறப்பு.! எல்லா வளமும், நலமும் பெற சிறப்பு வழிபாடு.!

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில், ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலையிலும் சிறப்பு பிரார்த்தனைகளில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
புது வருட பிறப்பை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் பெருமாளை தரிசனம் செய்தனர்.
வடபழனி முருகன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு திரளான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலிலும் புது வருட பிறப்பையொட்டி அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் 2 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புத்தாண்டையொட்டி சென்னை பாடிகார்டு முனீஸ்வரர் கோயிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததுடன், புதிய வாகனங்களுக்கும் பூஜை செய்தனர்.
திருவள்ளூர் திருத்தணி முருகன் கோயிலில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புத்தாண்டு பிறப்பையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் பக்தர்கள் அதிகாலை முதல் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் திரளான பக்தர்கள் புத்தாண்டு வழிபாடு நடத்தினர்.
Comments