புத்தாண்டை உற்சாகமாக வரவேற்கும் சீனர்கள்.. ஒளி வெள்ளத்தில் மிளிரும் 'ஐஸ்' கட்டடங்கள்..!

0 1126

சீனாவின் ஹார்பின் நகர கேளிக்கை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ஐஸ் கட்டடங்கள், புத்தாண்டை முன்னிட்டு ஒளிவெள்ளத்தில் மிளிர்ந்தன.

200 ஏக்கர் பரப்பளவிலான இந்த கேளிக்கை  பூங்காவிற்கு, அருகிலுள்ள ஷோங்குவா ஆற்றிலிருந்து உறைந்த ஐஸ் கட்டிகள் கொண்டுவரப்பட்டு, கண்கவர் கோபுரங்களும், அரங்குகளும் கட்டப்பட்டுள்ளன.

நார்னியா திரைப்படங்களில் வரும் கனவு தேசத்தைப்போல் காட்சியளிக்கும் இந்த கேளிக்கை பூங்காவை, அரை கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள சறுக்குப்பாதையில் சறுக்கியபடியும், 390 அடி உயர ராட்சத ராட்டினத்தில் வலம்வந்தபடியும் மக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments