சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு.. புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ள அமெரிக்கா!

0 2247

சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், அங்கிருந்து வரும் பயணிகளுக்கு அமெரிக்கா புதிய கட்டுப்பாடுகளை விதிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப்பயணம் தொடங்கும் 2 நாட்கள் முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான ஆதாரத்தை இணைக்க வேண்டும் எனவும், 10 நாட்கள் முன்பு தொற்று பாதித்தவர்கள் குணமடைந்ததற்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும் எனவும், இந்த புதிய விதிகள் ஜனவரி 5-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நாளை முதல் கட்டாய கொரேனா பரிசோதனையை ஜப்பான் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments