திருமண மண்டபத்தின் செப்டிக் டேங்கில் விழுந்த பெண் இடிபாடுகளில் சிக்கி உயிரிழப்பு..!
கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி அருகே திருமண மண்டபத்தின் கழிவறை செப்டிக் டேங் உடைந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
ஒட்டலிவிளையில் நடைபெற்ற திருமண விழாவில் முதலார் பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் - சுஜிஜா தம்பதியினர் கலந்து கொண்டனர் .
அவர்கள் மண்டபத்தின் பக்கவாட்டு பகுதி வழியாக நடந்து சென்ற போது எதிர்பாராத விதமாக கழிவறை செப்டிக் டேங் உடைந்து விழுந்ததில் இருவரும் உள்ளே விழுந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த குலசேகரம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்ற போது, வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்தது. இதனை அடுத்து தக்கலை தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று செப்டிக் டேங்கில் விழுந்த மோகன்தாஸ் மற்றும் சுஜிஜாவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில் இடிபாடுகளில் சிக்கிய சுஜிஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் மோகன்தாஸ் காயங்களுடன் மீட்கபட்டார் .
Comments