10ம் வகுப்பு மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆய்வக உதவியாளர் கைது..!

சேலம் அருகே 10ம் வகுப்பு மாணவிகளிடம் பாட்டுபாடி சிலிமிஷத்தில் ஈடுபட்டதாக ஆய்வக கூட உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கீரை பாப்பம்பாடி அரசுப் பள்ளியில் நேற்று மாலை பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பெற்றோர் சிலர் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றிவரும் வீர வேலு, மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புகார் தெரிவித்து, அவரை பிடித்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து அங்கு வந்த கல்வித்துறை அதிகாரி, காவல்துறை உயரதிகாரிகள் தலைமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு வீர வேலுவை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
Comments