தமிழ்நாட்டில் 2020 - 21 கல்வியாண்டில் 10ம் வகுப்பு முடித்தவர்கள், ஜேஇஇ தேர்வுக்கு, விரைவில் விண்ணப்பிக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை

0 2230

தமிழ்நாட்டில் 2020 - 21 கல்வியாண்டில் 10ம் வகுப்பு முடித்தவர்கள், ஜேஇஇ தேர்வுக்கு, விரைவில் விண்ணப்பிக்கலாம் என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மத்திய அரசால் நடத்தப்படும் ஜேஇஇ நுழைவுத்தேர்வு விண்ணப்பத்தில், 10ஆம் வகுப்பு மதிப்பெண்களை உள்ளீடு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 10ம் வகுப்பு மதிப்பெண்களை உள்ளீடு செய்யாமலேயே, தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக, தேசிய தேர்வு முகமையிடம், தமிழக பள்ளிக்கல்வித்துறை கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என, தேசிய தேர்வு முகமை உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், மாணவர்கள் பதற்றமடையாமல், ஜே.இ.இ தேர்வுக்கு தயாராகுமாறும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments