எல்லையில் டிரோன், போர் விமானங்களை அதிகளவில் நிலைநிறுத்திவரும் சீனா..!

0 1700
எல்லையில் டிரோன், போர் விமானங்களை அதிகளவில் நிலைநிறுத்திவரும் சீனா..!

இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு எதிராக, அதிகளவில் ஆளில்லா விமானங்கள், போர் விமானங்களை சீனா நிலைநிறுத்தி வருவது, செயற்கைகோள் புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் மாக்சர் செயற்கைக்கோள் புகைப்படங்களில், திபெத்தில் உள்ள பேங்டா, லாசா மற்றும் ஷிகாட்சே விமான தளங்களின் கட்டமைப்பை சீனா விரிவுபடுத்தி வருவதும், போர் விமானங்களை நிறுத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.

சிக்கிம், அருணாச்சல பிரதேச மாநிலங்களின் எல்லைகளில் இருந்து சுமார் 150 முதல் 260 கிலோமீட்டர் தொலைவில் இந்த விமான தளங்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments