ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் கடல் சீற்றத்தின் காரணமாக குடியிருப்புகளில் புகுந்த கடல் நீர்..!

அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக வங்கக்கடலில் மணிக்கு 55 முதல் 60 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்ற எச்சரிக்கையால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மன்னார்வளைகுடா பகுதி மீனவர்களுக்கு இன்றும், நெல்லை கூடங்குளம் பகுதி மீனவர்களுக்கு 21ஆம் தேதி வரையும், ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்களுக்கு மறு உத்தரவு வரும் வரையும் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதோடு, காற்றின் வேகம் காரணமாக கடல் நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது.
Comments