டோக்கியோவில் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக வாகனப்பேரணி..!

0 1107

குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், சாண்டா கிளாஸ் வேடத்தில் இருசக்கர வாகனப்பேரணி நடைபெற்றது.

மத்திய டோக்கியோவின் வீதிகளில் (ஹார்லி-டேவிட்சன் பைக்கில்) நடைபெற்ற இந்தப் பேரணியில், குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. 

பேரணியின்போது 4 குழந்தைகள் இல்லங்களுக்குச்சென்று, சுமார் 350 குழந்தைகளுக்கு பொம்மை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், துஷ்பிரயோகம் அதிகரித்திருப்பதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments