திரிபுரா - மேகாலயாவில் ரூ.6,800 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

திரிபுரா மற்றும் மேகாலயாவில், சுமார் 6ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
வீடு, சாலை, விவசாயம் மற்றும் தொலைத்தொடர்பு உள்பட பல்வேறு துறைகளுக்கான திட்டங்களை இரு மாநிலங்களிலும் தொடங்கி வைக்கும் பிரதமர், வடகிழக்கு கவுன்சிலின் பொன் விழா கொண்டாட்டத்திலும் பங்கேற்க உள்ளார்.
அகர்தலாவில், சுமார் 3ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பில், கிரஹ் பிரவேஷ் திட்டத்தின் கீழ், இரண்டு லட்சம் பயனாளிகளுக்கு வீடு கட்டும் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து, இந்திய மேலாண்மை நிறுவனம், அரசு பல் மருத்துவ கல்லூரி உள்ளிட்டவற்றை மோடி தொடங்கி வைக்க இருக்கிறார்.
Comments