பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முதலமைச்சர் பூபேஷ் பாகல் ஆதரவு

0 2154

பிரதமர் மோடியை சர்ச்சைக்குரிய வகையில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ
விமர்சனம் செய்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் பிரதமருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இப்பிரச்னை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பூபேஷ்பாகல், பூட்டோவின் கருத்தை தான் கண்டிப்பதாக கூறினார்.

மேலும், எங்கள் பிரதமரைப் பற்றி இது போன்று பேச யாருக்கும் உரிமை இல்லை என்று குறிப்பிட்டார்.

எங்களுக்குள் வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்கள் இருந்தாலும் இது தேசத்தைப் பற்றியது, மோடி எங்கள் பிரதமர் என்றும் பூபேஷ் பாகல் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments