தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டுத் திருவிழா..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் நடைபெற்ற கள்ளர் வெட்டுத் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித மணல் எடுத்து சென்றனர்.
பொதுமக்களின் கடைகளில் திருடி தொல்லை கொடுத்து வரும் கள்ளர்களை தண்டிக்கும் விதமாக அய்யனார் அருள் வந்து இளநீரை கள்ளராக பாவித்து இளநீர் வெட்டப்பட்டது.
அந்த இளநீர் பட்ட மணலை பக்தர்கள் புனித மணலாக கருதி பக்தர்கள் போட்டிபோட்டு தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
Comments