சென்னையில் 40 நாட்டு வெடிகுண்டு,40 கத்திகள் ஒரு துப்பாக்கி உள்ளிட்டவைகளுடன் சிக்கிய ரவுடி..!

சென்னை கொடுங்கையூரில் வெடி குண்டுகளுடன் சிக்கிய பிரபல ரவுடி போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது, கால் முறிவு ஏற்பட்டதாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 3-ம் தேதி வாகன சோதனையின்போது தனது கூட்டளி அப்புவுடன் சிக்கிய ரவுடி வெள்ளை பிரகாஷ், போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது, கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டதாக, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
முதலுதவி அளிக்கப்பட்டு, பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவருக்கு காலில் வலி ஏற்பட்டதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Comments