முன்விரோதம் காரணமாக 2 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மோதல்

0 1296

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே, இரண்டு தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மோதிக்கொள்ளும் வீடியோ, சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அரவுகாடு பகுதியில் செயல்பட்டு வரும் 2 பள்ளிகளை சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட மாணவர்கள், நேற்று மதியம் மோதலில் ஈடுபட்டனர். இதில் சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும், அவர்கள் முன்விரோதம் காரணமாக மோதிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

போலீசார் தானாக முன் வந்து இந்த மோதல் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments