சி.எஸ்.ஐ பாதிரியார்களுக்கு ஓய்வு வயதை 70 ஆக்கனுமாம் அடம் பிடித்த பிஷப் ஓட்டம்..! மைக்கை பறித்த நிர்வாகிகள்
நெல்லையில், தென்னிந்திய திருச்சபையில் உள்ள பாதிரியார்களின் ஓய்வு பெறும் வயதை 67ல் இருந்து 70 ஆக மாற்றுவதற்கு, தீர்மானம் கொண்டு வர முயன்ற பிஷப்பிடம் இருந்து மைக்கை பறித்து நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பிஷப் , பின் வாசல் வழியாக வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார்
பொதுவாக அரசு பணிகளில் ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது. சி.எஸ்.ஐ என்று சுருக்கமாக அழைக்கப்படும் தென்னிந்திய திருச்சபைகளில் உள்ள பாதிரியார்கள், குருமார்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
அவர்களின் ஓய்வு பெறும் வயதாக 67 உள்ளது. இந்த நிலையில் ஓய்வு பெறும் வயதில் உள்ள குருக்கள் ஒன்றிணைந்து தங்களின் ஓய்வு பெறும் வயதை 70 ஆக உயர்த்த கோரிக்கை வைத்தனர்.
பல்வேறு தேவாலயங்களில் உள்ள குருமார்கள் மீது ஏராளமான புகார்கள் இருப்பதால் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்க கூடாது என்று நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் திருநெல்வேலி டயோசிசனில் இதற்கான உறுப்பினர்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
பிஷப் பர்ணபாஸ் என்பவர் நிர்வாகிகளின் எதிர்ப்பை மீறி ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் தீர்மானத்தை தன்னிச்சையாக வாசிக்க முயன்றார் இதையடுத்து அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் முன்னால் இருந்த மேஜையை தட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்
அப்போது பர்ணபாஸின் கைகளில் இருந்த மைக்கை பறித்துக் கொண்டு விரட்ட, நிலமை கை மீறி செல்வதை உணர்ந்த பர்ணபாஸ் பயந்து போய் அங்கிருந்து பின் வாசல் வழியாக அவசர அவசரமாக வெளியேறும் நிலை ஏற்பட்டது
இதே போல கடந்த வாரம் தூத்துக்குடியில் சி.எஸ்.ஐ கூட்டத்தில் இதே தீர்மானத்தை நிறைவேற்ற முயன்றதால் அங்குள்ள நிர்வாகிகள் பிரதம பேராயரையும், தூத்துக்குடி பொறுப்பு பேராயரையும் காரில் ஏற்றி விரட்டி அடித்தனர்
குருமார்கள் ஓய்வு வயதை 70 வயது வரை நீட்டித்தால் அவர்களால் செயல்படுவதில் சிரமம் இருக்கும் என்பதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்
இந்த சம்பவங்களால் சி.எஸ்.ஐ குருமார்களின் ஓய்வு வயதை 70 ஆக உயர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Comments