அரசுக்கல்லூரிகளில் 1,895 கௌரவ விரிவுரையாளர் பணியிடம் - அமைச்சர் பொன்முடி

0 1400

தமிழகத்திலுள்ள அரசுக்கல்லூரிகளில் ஆயிரத்து 895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக, உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் கௌரவ விரிவுரையாளர் நியமனத்திற்கான இணையதளத்தை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, அரசு கலை - அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், காலியாக உள்ள 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும், அரசுக்கல்லூரி பேராசிரியர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் பொன்முடி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments