ஐயப்பன் கோயில் உண்டியலை உடைத்து சுமார் ரூ.2,000 கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்..!

சென்னை மணலி புதுநகரில் ஐயப்பன் கோயில் உண்டியலை உடைத்து, பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய சுமார் இரண்டாயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுநகரில் உள்ள ஐயப்பன் கோயிலில் நேற்று இரவு வழிபாடு நடைபெற்ற நிலையில், இன்று காலை நிர்வாகிகள் வழக்கம்போல் கோவிலை திறக்க சென்றபோது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு, போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
Comments