அரசுப்பேருந்தின் பின்னால் வந்த லாரி மோதி விபத்து.. அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பிய பயணிகள்..!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் புறவழிச்சாலையில் அரசு பேருந்தின் பின்னால் வந்த லாரி மோதிய விபத்தில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருவண்ணாமலையிலிருந்து சென்னை நோக்கி சென்றுக்கொண்டிருந்த பேருந்து, நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு,புறப்படத்துவங்கி மெதுவாக சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த லாரி மோதியதாக கூறப்படுகிறது.
பேருந்தில் இருந்த பயணிகள் சிறுகாயங்களுடன் உயிர்தப்பினர். நெடுஞ்சாலையில் விபத்து நேரிட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், விபத்துக்குள்ளான வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனையடுத்து போக்குவரத்து சீரானது.
Comments