பிறந்து சில மணி நேரமான பச்சிளம் குழந்தை பள்ளிக் கழிவறையில் இறந்து கிடந்த அதிர்ச்சி சம்பவம்..!

0 2597

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அரசுப் பள்ளியில் பிறந்து சில மணி நேரங்களேயான நிலையில் இறந்து கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கழிவறை அருகே இறந்த நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை கிடந்துள்ளது.

தகவலறிந்த திருவெறும்பூர் போலீசார், சிசுவின் சடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்து பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையில் குழந்தை பிறந்ததா? வெளியில் இருந்து வீசிச் சென்றார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments